அப்பா விஜய் கூட பேச்சுவார்த்தையே இல்லையா?!: சிக்மா விழாவில் ஜேசன் செய்த தரமான செய்கை

விஜய் , சங்கீதா விவகாரம்: என் கணவர் ஜோசப் விஜய்க்கும், நடிகை ஒருவருக்கும் திருமணத்தை தாண்டிய உறவு இருப்பதால் நான் பாதிக்கப்பட்டேன் என்று கூறி விவாகரத்து கேட்டிருந்தார் சங்கீதா சொர்ணலிங்கம். விஜய்ணா வாழ்க்கையில் இன்னொரு பெண்ணா என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். தளபதி விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து தமிழக முதல்வராக பதவியேற்றது, முதல்வராக முதல் முறையாக சுதந்திர தின விழாவில் கொடியேற்றியது என எந்த நிகழ்ச்சிக்கும் சங்கீதாவோ, மகன் ஜேசன் சஞ்சயோ, மகள் திவ்யா சாஷாவோ வரவில்லை.

அம்மாவுக்கு இப்படி நடந்துவிட்டதால் அப்பாவிடம் பேசுவதை நிறுத்திவிட்டாராம் ஜேசன். தாய்க்கு ஆதரவாக இருந்து, தான் ஒரு நல்ல மகன் என நிரூபித்துக் கொண்டிருக்கிறார் என தாய்மார்கள் பேசினார்கள். இந்நிலையில் தான் இயக்கியிருக்கும் சிக்மா படத்தின் விழாவில் கலந்து கொண்டு மேடையில் பேசினார் ஜேசன்.

முதல்வர் மகன்: அப்பொழுது, இந்த நேரத்தில் என் குடும்பத்திற்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன் என ஜேசன் சொல்ல அரங்கமே அதிர்ந்தது. சில நிமிடம் ஜேசனை பேச விடாமல் அரங்கில் இருந்தவர்கள் விஜய், விஜய், விஜய் என மகிழ்ச்சி கரகோஷமிட்டார்கள். அதை பார்த்த ஜேசன் சஞ்சயோ தம்ஸ்அப் காட்டினார். இதன் மூலம் அப்பா மீது கோபம் எல்லாம் இல்லை என்பதை நிரூபித்துவிட்டார் ஜேசன் என விஜய் ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அக்டோபர் 2ம் தேதி ரிலீஸாகவிருக்கும் சிக்மா குறித்து ஜேசன் சஞ்சய் அளித்து வரும் பேட்டிகளில் அவர் பேசும் விதத்தை பார்த்தால் முதல்வர் ஜோசப் விஜய் மீது அவருக்கு வருத்தம் இருப்பதாக தெரியவில்லை. எங்கப்பா என பெருமையாக தான் பேசி வருகிறார்.

திருமலை பார்த்த ஜேசன்: அதே விழாவில் எந்த படம் உங்களை பயங்கரமாக இன்ஸ்பையர் செய்து இயக்குநராக வைத்தது என்று கேட்டபோது, அப்பா படம் தான் என ஜேசன் சஞ்சய் சொல்வார் என அங்கிருந்த விஜய் ரசிகர்கள் எல்லாம் எதிர்பார்த்தார்கள். அதை புரிந்து கொண்ட ஜேசனோ, என்னை யாரும் திட்டாதீங்க, பிரேசிலிய படமான சிட்டி ஆஃப் காட் தான் நான் இயக்குநராக காரணமான படம் என்றார். பரவாயில்லை குட்டி தளபதி, எங்கள் மனதில் இருப்பதை புரிந்து கொண்டு பேசுகிறீர்களே, அதுவே போதும் என விஜய் ரசிகர்கள் இம்பிரஸ் ஆகிவிட்டார்கள்.

ஜேசன் சஞ்சய்க்கு மூன்று வயது ஆனபோது தான் அவர் முதல் முறையாக தியேட்டருக்கு சென்று படம் பார்த்திருக்கிறார். அது கண்டிப்பா அப்பா படம் தான். விஜய்ணாவின் திருமலை தான் ஜேசன் பார்த்த முதல் படம் ஆகும். திருமலை என ஜேசன் சஞ்சய் கூறியதும் விஜய் ரசிகர்கள் எல்லாம் குஷியாகி கோஷமிட்டார்கள்.

அப்பா ரசிகர்களின் ஃபுல் சப்போர்ட் தனக்கு இருப்பதை சேலம் விழாவில் ஜேசன் சஞ்சய் நிச்சயம் உணர்ந்திருப்பார். ஜேசன் ஸ்மைல் பண்ணுவது, ரியாக்ட் செய்வது, பேசுவது, நடப்பது எல்லாம் விஜய்யை பார்த்த மாதிரி இருப்பதாக தளபதியன்ஸ் சொல்கிறார்கள்.

லண்டனில் விஜய்: விஜய்ணா தற்போது லண்டனில் இருக்கிறார். தன் வேலையை முடித்துக் கொண்டு வரும் போது அவர் சங்கீதா அண்ணி உடன் சேர்ந்து விமான நிலையத்தில் இருந்து ஜோடியாக வெளியே வர வேண்டும் கடவுளே என்பதே விஜய் ரசிகர்களின் லேட்டஸ்ட் பிரார்த்தனை ஆகும்.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

இதற்கிடையே லண்டனில் நாளை நடக்கும் கார் பந்தயத்தில் அஜித் குமார் கலந்து கொள்கிறார். நண்பருக்காக அந்த பந்தயத்தை பார்க்கச் செல்வாரா விஜய் என்பதே பலரின் கேள்வி ஆகும்.

Source link