அமித்ஷா குறித்து அவதூறு : ராகுலுக்கு எதிரான மனு தள்ளுபடி

லக்னோ: 2018 ல் நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலின் போது பெங்களூருவில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல், அப்போது பாஜ தலைவராக இருந்த அமித்ஷாவை அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ராகுல் மீது மாவட்ட பாஜ துணைத்தலைவர் விஜய் மிஸ்ரா, ஐபிசி சட்டப்பிரிவு 499 மற்றும் 500 ஆகியவற்றின் கீழ் ராகுலுக்கு எதிராக கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கில் நீதிமன்றம் ராகுலுக்கு சம்மன் அனுப்பியது. 2023ல் நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல், ஜாமின் வழங்கினார். விசாரணை முடிந்த நிலையில் அக்டோபர் 13ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பிறகு விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இன்று தீர்ப்பு வழங்கிய கூடுதல் தலைமை நீதிபதி சுபம் வர்மா, ” ராகுலின் கருத்து அவதூறு இல்லை. அவர் குற்றமற்றவர்,” எனக்கூறி வழக்கில் இருந்து விடுவித்தார். தீர்ப்பு வழங்குவதை முன்னிட்டு, நீதிமன்றத்தில் ராகுல் நேரில் ஆஜரானார்.

விபத்து

இந்த வழக்கில் ஆஜராக, லக்னோவில் இருந்து சுல்தான்பூருக்கு ராகுல் காரில் பயணம்பூர்வாஞ்சல் விரைவுச் சாலையில் ராகுலின் கான்வாய் சென்றது. பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வேயில் னெ்ற போது, கானவாயில் வந்த 5 கார்கள் ஒன்றோடு ஒருன்று மோதின. ஆம்புலன்ஸ் மீதும் கான்வாய் வாகனம் மோதியது. ராகுல் சென்ற வாகனத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர் நலமுடன் உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

Source link