அமெரிக்காவுக்கே இடம் இல்லையா? ஒவ்வொருத்தர் கிட்டயும் ரூ.8 கோடி இருக்காம்; உலகின் டாப் பணக்கார நாடு இதுதான்

உலகின் பணக்கார நாடு என்றதுமே பலரது நினைவுக்கு வருவது அமெரிக்கா அல்லது சில ஐரோப்பிய நாடுகள் தான். ஆனால், முன்னணி நிதி நிறுவனமான யு.பி.எஸ் (UBS) வெளியிட்ட ‘உலகளாவிய செல்வ அறிக்கையின்’ (Global Wealth Report) தரவுகளின்படி, உலகின் மிக அதிகமான பணக்காரர்கள் வாழும் நாடாக சுவிட்சர்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த இரண்டு முக்கிய நாடுகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. யு.பி.எஸ் அறிக்கையின்படி உலகின் அதிக செல்வ வளம் கொண்ட நாடுகள் பட்டியல் குறித்து பார்க்கலாம்.

தண்டவாளத்துக்கு கீழே ஒரு குட்டி நகரமே இருக்கா? அங்கேயும் ட்ரெயின் போகுதாம்; மாஸ் காட்டிய சீனா

சுவிட்சர்லாந்து 

இயற்கை எழில் கொஞ்சும் ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இங்கு தனிநபர்  சராசரி சொத்து மதிப்பு சுமார் ரூ.8.75 கோடி ஆகும். வங்கியியல், காப்பீடு, சுற்றுலா, உலகப் புகழ்பெற்ற கைக்கடிகாரத் தயாரிப்பு, மருந்துத் துறை மற்றும் சாக்லேட், பால் பொருட்கள் உற்பத்தி ஆகியவை இதன் பிரதான பலமாகும்.

 அமெரிக்கா 

பொருளாதார ரீதியாக சக்திவாய்ந்த அமெரிக்கா இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கு தனிநபர் சராசரி சொத்து மதிப்பு சுமார் ரூ.6.45 கோடி ஆகும். அமெரிக்கா உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 26% பங்களிப்பைக் கொண்டுள்ளது. இதன் நாணயமான அமெரிக்க டாலர், உலகின் வலிமையான வர்த்தக நாணயமாக விளங்குகிறது.

லக்சம்பர்க்

மிகவும் சிறிய ஐரோப்பிய நாடான லக்சம்பர்க், உலகின் மிகவும் வளர்ந்த பொருளாதாரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இங்கு தனிநபர் சராசரி சொத்து மதிப்பு சுமார் ரூ.6.32 கோடி ஆகும். வேதிப்பொருட்கள், ரப்பர், தகவல் தொழில்நுட்பம், உணவு உற்பத்தி மற்றும் விண்வெளித் தொழில்நுட்பத் துறைகளில் சிறந்து விளங்குகிறது.

ஹாங்காங் 

ஆசியப் பிராந்தியத்தில் முதலிடத்தையும், உலகளவில் 4-வது இடத்தையும் ஹாங்காங் பெற்றுள்ளது. தனிநபர் சராசரி சொத்து மதிப்பு சுமார் ரூ.6.25 கோடி ஆகும். தாராள சந்தைப் பொருளாதாரத்தைக் (Free-market economy) கொண்டுள்ள ஹாங்காங்கின் ஜி.டி.பி சுமார் 400 பில்லியன் டாலர் ஆகும். குறைந்த மக்கள்தொகை காரணமாக இங்குத் தனிநபர் செல்வ அளவு மிகவும் அதிகமாக உள்ளது.

ஆஸ்திரேலியா 

வளமிக்க இயற்கை வளங்களைக் கொண்ட ஆஸ்திரேலியா இப்பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு தனிநபர் சராசரி சொத்து மதிப்பு சுமார் ரூ.5.94 கோடி ஆகும். சேவைத் துறை  இந்நாட்டின் ஜி.டி.பி-யில் 70% பங்களிக்கிறது. மேலும் இரும்புத் தாது, நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதி மூலம் கணிசமான வருவாயை ஈட்டுகிறது.

சிங்கப்பூர் 

பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்றொரு ஆசிய நாடான சிங்கப்பூர், தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி நிதி மையமாகத் திகழ்கிறது. தனிநபர் சராசரி சொத்து மதிப்பு சுமார் ரூ.5 கோடி ஆகும். நிதிச் சேவைகள் நாட்டின் ஜி.டி.பி-யில் 73% பங்களிப்பை வழங்குகின்றன. அத்துடன் எலக்ட்ரானிக்ஸ், உயிர் மருத்துவத் துறை மற்றும் உலகின் மிக பரபரப்பான கடல்சார் துறைமுகங்களில் ஒன்றாகவும் சிங்கப்பூர் விளங்குகிறது.

Source link