அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சொந்த மண்ணில் கோகோ காப்பை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறிய ரிபாகினா

Summary

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் சொந்த மண்ணிலேயே அமெரிக்காவின் கோகோ காப்பை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று போட்டிகள் இன்று நடந்தன.

முதல் போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 3-6 என முதல் செட்டை இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட ரிபாகினா அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-4, 6-4 என கைப்பற்றி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

சொந்த மண்ணில் அமெரிக்காவின் கோகோ காப் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் சபலென்கா உடன் எலினா ரிபாகினா மோதுகின்றார்.

Source link