அமைச்சர் ராஜினாமா ஏன்? தமிழிசை சொன்ன காரணம்

இளைஞர்களின் எழுச்சி மிகு போராட்டத்தைத் தொடர்ந்து அமைச்சர் தர்மேந்திர பிரதான், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த ராஜினாமா என்பது தேசிய அரசியலில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பாஜக பொறுப்பேற்றுக் கடந்த 12 ஆண்டுகளில் போராட்டத்தின் காரணமாகப் பதவி விலகும் முதல் அமைச்சர் இவர் என்றும் கூறப்படுகிறது.  இந்த போராட்டம்,  பாஜகவின் மீதான மக்களின் அதிருப்தியா? அல்லது பாஜக அரசின் நிர்வாகத் திறமையின்மையா? என பல்வேறு விமர்சனங்களைப் பலரும் முன் வைத்து வருகின்றனர்.  

இந்நிலையில், இந்த ராஜினாமா குறித்து தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ”இளைஞர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, ஒன்றிய அரசு  போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. அந்த பேச்சு வார்த்தையில் பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. குறிப்பாக, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென அவர்கள் கோரிக்கை முன் வைத்தனர். மாணவர்களின் இந்த கோரிக்கையை ஏற்று இந்த ராஜினாமா முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில், இந்த போராட்டம் திசை மாறிப்போகிற வகையில் உள்ளது. குறிப்பாக, பீகாரின் இந்த போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. எனவே, இளைய சமுதாயம் பாதிக்கப்படக்கூடாது. அதே நேரத்தில், சில அரசியல் கட்சிகள் இதனைத் தவறாகப் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்காக ஒன்றிய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.  

Source link