கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் மொபைல் கடையின் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மார்க்கமாக கோவை வந்தடைந்தார் நடிகை திரிஷா. அவருக்கு கோவை விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து கார் மூலமாக சென்ற திரிஷா, சுமார் 4 மணியளவில் கோவை காந்திபுரம் அடுத்த 100 அடி சாலையில் தனியார் மொபைல் கடையினை திறந்து வைதார்.
நடிகை திரிஷா வருகையை தொடர்ந்து கோவையில் அவரது ரசிகர்கள் உற்ச்சாகமடைந்துள்ளனர். மேலும் திரிஷா வருகை காரணமாக மொபைல் கடையில் பாதுகாப்பு பணியில் அதிகமாக பவுன்சர்கள் நியமிக்க பட்டுள்ளனர்.
அரசியலில் நுழைவீர்களா?
தனியார் நிகழ்வில் பங்கேற்பதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்த நடிகை திரிஷா- உற்சாக வரவேற்பு அளித்த நடிகை திரிஷா ரசிகர்கள்! #Trisha https://t.co/Ic6oVXB9or
— Indian Express Tamil (@IeTamil) October 24, 2026
இந்நிலையில், கோவை விமான நிலையம் வந்தடைந்த நடிகை திரிஷாவிடம் வரும் காலத்தில் அரசியலுக்கு வருவீர்களா? என்று அங்கிருந்த நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு புன்னகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு சென்ற நடிகை திரிஷா.
