அரசு ஐடிஐ-க்களில் ரூ.5 கோடியில் நிறுவப்பட்ட நவீன மின்ஆய்வகங்களை முதல்வர் திறந்தார்

சென்னை: தனியார் நிறு​வனத்​தின் உதவியுடன் ரூ.5.10 கோடி செல​வில் 30 அரசு ஐடிஐ-க்களில் அமைக்​கப்​பட்​டுள்ள மேம்​பட்ட மின்​ஆய்​வகங்​களை முதல்​வர் விஜய் நேற்று திறந்​து​வைத்​தார்.

தமிழகம் முழு​வதும் 30 அரசு தொழிற்​பயிற்சி நிலை​யங்​களில் (ஐடிஐ) ஸ்னைடர் எலெக்ட்​ரிக் இந்​தியா நிறு​வனத்​தின் உதவியுடன் ரூ.5.10 கோடியில் மேம்​பட்ட மின்​ஆய்​வகங்கள் அமைக்கப்​பட்​டுள்​ளன. இதனை கிண்டி அரசு ஐடிஐ-யில் நேற்று நடை​பெற்ற விழா​வில், முதல்​வர் திறந்​து​வைத்தார்.

மேலும், மாநில அளவி​லான திறன் போட்​டி​யில் வெற்​றி​பெற்ற 15 மாணவர்​களுக்கு தலா ரூ.25 ஆயிரத்​துக்​கான காசோலைகளை​யும் அகில இந்​திய தொழிற் தேர்​வு​களில் தேசிய அளவில் முதலிடம் பெற்​றவர்​களுக்கு பாராட்​டுச் சான்​றிதழ்​களை​யும் டிஎன்​பிஎஸ்சி மூலம் இளநிலை பயிற்சி அலு​வலர் பணிக்கு தேர்வான 673 பேருக்கு பணி​நியமன ஆணைகளை​யும் முதல்​வர் வழங்​கினார்.

மேலும் ரூ.6.80 கோடி மதிப்​பீட்​டில் 40 அரசு ஐடிஐ-க்களில் நவீன மின்​ஆய்​வகங்​கள் அமைப்​பது தொடர்​பாக முதல்​வர் முன்​னிலை​யில் வேலை​வாய்ப்பு மற்​றும் பயிற்​சித் துறை இயக்​ககத்​துக்​கும் ஸ்னைடர் எலெக்ட்​ரிக் இந்​தியா நிறு​வனத்​துக்​கும் இடையே புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

முன்​னதாக, முதல்​வர் விஜய் மாணவர்​களின் திறன் படைப்​பு​களைப் பார்​வை​யிட்டு மாணவர்​களு​டன் கலந்​துரையாடினார். விழா​வில் அமைச்​சர் முகமது பர்​வேஸ், எம். அருள்பிரகாசம் எம்எல்ஏ, தலை​மைச் செயலர் எம்.சாய்​குமார், துறை செயலர் கொ.வீரராகவ ராவ், துறை இயக்​குநர் சி.பழனி உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

Source link