அரசு ஒப்புதலுடன் சேவை வழங்க தயார்: பணிந்தார் 'ஸ்டார்லிங்க்' எலான் மஸ்க்

புதுடில்லி: இந்தியாவில் பாதுகாப்பான இணையதள சேவையை வழங்க தயாராக இருப்பதாக, அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையிலான ‘ஸ்டார்லிங்க்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, இந்தியாவுக்குள் ஸ்டார்லிங்க் நுழைவதை தடுப்பதாக எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்து வந்தார்.

அதையடுத்து, “நாங்கள் ஒருபோதும் போட்டிக்கு அஞ்சியதில்லை. எந்த நிறுவனமாக இருந்தாலும், இந்திய பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் கொள்கைகளை பின்பற்ற வே ண்டும்,” என்று ரிலையன்ஸ் நிறுவனம் நேற்று முன்தினம் கூறியது.

அதற்கு பதிலளிக்கும் விதமாக, ஸ்டார்லிங் நிறுவனம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. தனது விமர்சனத்தை கைவிட்டு எலான் மஸ்க் பணிந்துள்ளதை காட்டும் விதமாக அறிக்கை இருப்பதாக கூறப்படுகிறது.

சமூக வலைதள பதிவில் ஸ்டார்லிங்க் கூறுகையில், இந்தியாவில் அதிவேக செயற்கைக்கோள் இணைய சேவையை வழங்க தயாராக இருக்கிறோம்.

ஏற்கனவே, இந்திய ஒழுங்குமுறை அமைப்புகள், தொழில் துறையினர் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நெருக்கமாக பணியாற்றியுள்ளோம்.

நாட்டின் வாடிக்கையாளர்களுக்கான இணைய போக்குவரத்தை பாதுகாப்பாக கையாளும் வகையில், நாட்டுக்குள்ளேயே பிரத்யேக நெட்வொர்க் அமைப்புகள், கேட்வேக்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளோம்.

இவை அனைத்தும் தேவையான அரசு ஒப்புதல்களுடன் அமைக்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

Source link