அரசு சார்பில் மளிகைக் கடை; தள்ளுபடி விலையில் பொருட்கள்

கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் விலைவாசி ஏற்றம் மற்றும் உணவு தட்டுப்பாடு அதிகரித்து வருவதாக சில வாரங்களுக்கு முன்பு பிரபல கருத்துக் கணிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்ததது. அதாவது, அங்கு  ஏராளமான மக்கள் வறுமையிலும், பசியிலும் தவித்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.  இந்த அறிக்கை வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், நியூயார்க் மேயர் மம்தானி வெளியிட்டுள்ள அறிவிப்பு மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது,.    

அதன்படி, அரசு சார்பில் மளிகைக் கடைகள் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.  முதல் மளிகைக் கடை 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் பிராங்க்ஸில் உள்ள ஹன்ட்ஸ் பாயின்ட்டில் திறக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.  

கிழக்கு ஹார்லமில் உள்ள லா மார்குவேட்டா உட்பட, ஒவ்வொரு பெருநகரத்திற்கும் ஒரு கடை என்ற வீதத்தில் மொத்தம் 5 கடைகள் அமைக்கப்படும். தனது முதல் பதவிக்காலத்தின் இறுதிக்குள் இக்கடைகள் திறக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.  இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக, 70 மில்லியன் டாலர்களை ஒதுக்கப்பட்டுள்ளது.  

இது குறித்து மம்தானி தனது சமூக வலைத்தள பக்கத்தில், “இந்த மளிகைக் கடைகளில், முட்டை, பால், கோழி இறைச்சி, காய்கறிகள் மற்றும் பிற அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் மீது நியூயார்க் நகர மக்களுக்கு 30% தள்ளுபடி கிடைக்கும். உலகின் மிகப் பணக்கார நாட்டின் மிகப் பணக்கார நகரத்தில், தமக்கோ அல்லது தங்கள் குடும்பத்தினருக்கோ தேவையான உணவை வாங்குவதற்கு  இனி அதிக சிரமப்பட வேண்டிய தேவை இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.    

Source link