தங்கம் விலை கடந்த வாராமாக ஏற்றத்தை மட்டுமே சந்தித்து வந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை மட்டுமே சவரனுக்கு ரூ 2,160 குறைந்த தங்கம் விலை அதன் பின்பும் ஏற்றத்தை மட்டும் சந்தித்து வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் (27.08.2026 ) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கததின் விலை சவரனுக்கு ரூ 560 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,06,960க்கும்,கிராமுக்கு ரூ 70 உயர்ந்து ஒரு கிராம் ரூ 13,370 க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று (28.07.2026) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 1,240 குறைந்து ஒரு சவரன் ரூ 1,05,720க்கும்,கிராமுக்கு ரூ 155 குறைந்து ஒரு கிராம் ரூ 13,215க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்த தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 480 குறைந்து ஒரு சவரன் ரூ 1,05,240க்கும், கிராமுக்கு ரூ 60 குறைந்து ஒரு கிராம் ரூ 13,155க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ 235க்கும், ஒரு கிலோ ரூ 2,35,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
,
