அல்ட்ராடெக் நிறுவனத்துக்கு ரூ.782 கோடி ஜி.எஸ்.டி., நோட்டீஸ்

புதுடில்லி:அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனத்திடம், ரூ.782.20 கோடி வரி செலுத்துமாறு பாட்னாவில் உள்ள மத்திய ஜி.எஸ்.டி இணை இயக்குநர் அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2018 — 19 முதல் 2022- – 23 கால கட்டத்தில் குறைவாக வரி செலுத்தியது,

உள்ளீட்டு வரி வரவை தவறாக பயன்படுத்தியது ஆகியவற்றை காரணமாகக் குறிப்பிட்டு அந்த ஆணை அனுப்பப்பட்டுள் ளதாக, அல்ட்ராடெக் நிறுவனம் கூறியுள்ளது.

ஜி.எஸ்.டி., வரி பாக்கி 390.96 கோடி ரூபாய் மற்றும் அதற்கான வட்டி, கூடுதல் வட்டி 27.68 லட்சம் ரூபாய் மற்றும் அபராத தொகை சேர்த்து நிலுவையை கணக்கிட்டு ஜி.எஸ்.டி., அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘நாங்கள் சமர்ப்பித்த ஆவணங்களை வரிவிதிப்பு அதிகாரிகள் பரிசீலிக்கவில்லை. வரி செலுத்தக்கோரும் ஆணையை ஆய்வு செய்து வருகிறோம்.

எங்களுக்கு உள்ள சட்டப்படியான வாய்ப்புகளை ஆராய்ந்த பிறகு நோட்டீஸை எதிர்த்து உரிய அமைப்பில் முறையிடுவோம்’ என்று தெரிவித்தனர்.

Source link