– நமது நிருபர் –
ஜப்பானின் அய்ச்சி- நாகோயாவில் ஆசியா பாரா விளையாட்டு போட்டி நடக்கின்றன.
ஆடவர் வட்டு எறிதலில் இந்தியாவின் பிரணவ் சூர்மா தங்கமும், ராம் ரத்தன் சிங் வெள்ளி பதக்கமும் வென்றனர்.
மகளிர் டி12 பிரிவில் இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை சிம்ரன் தங்கமும், தேஜல்பேன் டாமோர் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
ஆடவர் 200 மீட்டர் தனிநபர் மெட்லி SM7 பிரிவில் நீச்சல் வீரர் நிரஞ்சன் முகுந்தன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
உயரம் தாண்டுதில் 2.04 மீட்டர் உயரத்தை தாண்டி சாதனை படைத்த நிஷாத் குமார், தங்கம் வென்றார்.
400 மீட்டர் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜீவன்ஜி தீப்தி தங்கம் வென்றார்.
வட்டு எறிதல் எப்43/எப்44/எப்62/எப்64 பிரிவில் தேவேந்தர் குமார் தங்கப்பதக்கம் வென்றார். இதே பிரிவில் ராகேஷ் வெள்ளியும், குமார் பிரதீப் வெண்கலமும் வென்றனர்.
