ஆட்டோக்களுக்குப் புதிய கட்டணம் நிர்ணயித்து உத்தரவைப் பிறப்பித்துள்ளது தமிழ்நாடு அரசு.
2014-ம் ஆண்டு அக்டோபருக்குப் பிறகு, ஆட்டோ கட்டணத்தை உயர்த்தி இப்போதுதான் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் உத்தரவின் படி,
குறைந்தபட்ச தூரம்: 1.8 கிலோமீட்டர்.
குறைந்தபட்ச கட்டணம்: ரூ.50
கூடுதலாகும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும்: ரூ.25
காத்திருப்புக் கட்டணம்: ஒரு நிமிடத்திற்கு ரூ.1
மலைப்பாதைக் கட்டணம்: குறைந்தபட்சக் கட்டணத்தில் இருந்து 1.2 மடங்கு.

அடிப்படைக் கட்டணம் ரூ.60; கூடுதலாக ஆகும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கு ரூ.30.
இரவு நேரக் கட்டணம்: இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வழக்கமான கட்டணத்தில் இருந்து 1.5 மடங்கு உயர்வு.
எந்தெந்தப் பகுதிகளுக்கு இந்த உத்தரவு?
1988-ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், சென்னை பெருநகரப் பகுதி மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இயங்கும் ஒப்பந்த ஊர்தி (Contract Carriage) ஆட்டோ ரிக்ஷாக்களுக்கான கட்டண விகிதங்களை உயர்த்துதல் தொடர்பான அறிவிப்பு என்று தமிழ்நாடு அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
