பரமக்குடி : ‘தமிழகத்தில் ஆணவ படுகொலையை தடுக்க, விரைவில் தனிச்சட்டம் கொண்டு வரப்படும்’ என சமூகநீதித் துறை அமைச்சர் வன்னியரசு தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அமைச்சர் வன்னியரசு தலைமையில், அக்கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.பின், வன்னியரசு கூறுகையில், “ஆணவப் படுகொலையை தடுத்து நிறுத்த, தனி சட்டம் நிறைவேற்றப்படும் என சட்டசபையில் தெரிவித்தேன்.
“அதன்படி, கே.என்.பாட்ஷா அறிக்கை அடிப்படையில், விரைவில் தனி சட்டம் கொண்டு வரப்படும். மதம் மாறிய கிறிஸ்துவர்களின் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்,” என்றார்.
