ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் 2வது நாளாக சுற்றுலா பயணியர் குளிப்பதற்கு தடை

ஆத்துார்: கல்வராயன்மலை பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து, சுற்றுலா பயணியர் குளிப்பதற்கு, வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே, முட்டல் கிராமம், கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ளது. முட்டல் ஏரி மற்றும் ஆணைவாரி நீர்வீழ்ச்சி. இவை, வனத்துறையின் சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

கல்வராயன்மலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நீரோடை மற்றும் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆணைவாரி நீர்வீழ்ச்சியிலும், தண்ணீர் வரத்து அதிகளவில் வருகிறது.

நேற்று முன்தினம், நீர்வீழ்ச்சி பகுதிக்கு சுற்றுலா பயணியர் செல்வதற்கும், குளிப்பதற்கும் வனத்துறையினர் தடை விதித்தனர். நேற்று இரண்டாவது நாளாக, தண்ணீர் வரத்து அதிகம் வந்ததால், சுற்றுலா பயணியருக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டது.

ஏரி மற்றும் பூங்கா பகுதிக்கு மட்டும் சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்படுகின்றனர்.

Source link