இந்தியா – மெக்சிகோ இடையே வர்த்தக ஒப்பந்தம்; விரைவில் பேச்சுவார்த்தை

இந்தியா, மெக்சிகோ இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சு இந்த வாரம் தொடங்குகின்றன.

மெக்சிகோ நாடானது, 1463 பொருட்களுக்கான இறக்குமதி விதியை 50 சதவீதம் வரை உயர்த்தியது. எந்தெந்த நாடுகளின் பொருட்களுக்கு எத்தனை சதவீதம் இறக்குமதி வரி என்ற பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் இந்தியாவின் பெயரும் இடம்பெற்று இருந்தது.

இறக்குமதி வரி காரணமாக, வாகனங்கள், பொறியியல் என பல்வேறு துறைகளை சார்ந்த ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது இந்திய பொருட்களின் இறக்குமதி வரியை குறைத்து, ஏற்றுமதியை பாதுகாக்கும் நோக்கில் விரிவான முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் தொடங்கப்பட இருக்கின்றன.

அதற்காக விதிமுறைகளில் இந்தியா, மெக்சிகோ நாடுகள் இந்த வாரம் கையெழுத்திடுகிறது. தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தைவிட, இரு நாடுகளும் முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தை பேச்சு வார்த்தை வழியாக எட்டுவது என்பது இறக்குமதி வரியால் எழுந்துள்ள சிக்கலை விரைவில் சமாளிக்க உதவும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Source link