ஆந்திராவில் பாதிப்பை ஏற்படுத்திய அர்னாப் புயல்: 5 பேர் பலி

விசாகப்பட்டினம்: வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு புயலாக உருவெடுத்தது. இதற்கு வங்கதேசம் வழங்கிய அர்னாப் என பெயர் சூட்டப்பட்டது.

மிகத் தீவிர புயலாக உருவெடுத்த அர்னாப், இன்று அதிகாலை ஆந்திராவின் விசாகப்பட்டினம் பாபட்லா இடையே நீண்ட நேரத்திற்கு கரையை கடந்தது. கரையை கடக்க 6 மணி நேரம் ஆனது. இதன் பிறகு தீவிர புயலாக வலுவிழந்தது.

இதன் காரணமாக, ஆந்திரா மற்றும் ஒடிசாவின் தென் பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது.

இன்று காலை 8:30 மணி நிலவரப்படி

ஆந்திராவில்,

விசாகப்பட்டினத்தில்- 31.5 செமீ

விஜயநகரத்தில்-30.5 செமீ

அனகபள்ளியில்-27.5 செமீ

ஸ்ரீகாகுளத்தில் 25.7 செமீ

கிருஷ்ணா என்ற இடத்தில் 22.3 செமீ மழை பதிவானது. விஜயவாடா மற்றும் விஜயநகரத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

விசாகப்பட்டினம், அனகபள்ளி, காக்கிநாடா, கோனசீமா மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தனர்.

ஒடிசாவில்

கோபுட் சாவில் 18.8 செமீ

கஞ்சம்-16.1 செமீ

கஜபாய் 13.5 செமீ மழை பதிவானது.

ஒடிசாவில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்தில் சிக்கல் நிலவுகிறது. பள்ளிகள் மூடப்பட்டன. அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Source link