இது குறித்து மாநில தேர்தல் ஆணையர் விவேக் யாதவ் கூறுகையில், ”ஆந்திர மாநிலத்தில் முதற்கட்ட எஸ்ஐஆர் பதிவுகளின் அடிப்படையில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 4 கோடியே 16 லட்சத்து 27 ஆயிரத்து 694 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில், 44,71,523 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதாவது, சம்பந்தப்பட்ட முகவரியில் இல்லாதவர்கள் 7,76,900 பேர், ஆந்திராவை விட்டு வெளிமாநிலங்களுக்கு மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் என 14,34,112 பேர், இறந்தவர்கள்15,19,558 பேர், இரண்டு இடங்களில் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் 7,32,566 பேர் மற்றும் வேறு சில காரணங்களுக்காக 8,387 பேர் என மொத்தமாக 44,71,523 பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 30 வரை மக்கள் தங்களுக்கு ஏதேனும் சந்தேகம் அல்லது தனிப்பட்ட கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்கலாம். அதன் பின்னர், செப்டம்பர் 28 க்குள் வாக்காளர்கள் தெரிவித்த கருத்துக்கள் பரிசீலிக்கப்படும். இதையடுத்து, அக்டோபர் 3 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.
