“என்றென்றும் நான் போற்றிப் பாதுகாக்கும் நினைவுகள்…”

முதல்வர் விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ படம் பல்வேறு பிரச்சனைகளைத் தாண்டி கடந்த 23ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. கேவிஎன் நிறுவனத்தின் முதல் தமிழ் படமான இப்படத்தை வினோத் இயக்கியிருந்தார். பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். 

இதுவரை இப்படம் வசூல் ரீதியாக ரூ.200 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இதனிடையே விஜய்யின் கடைசி படம் என்பதால் உற்சாகத்துடன் வரவேற்ற ரசிகர்கள் படம் முடிந்து மிகவும் சோகமாக கண்ணீர் விட்டு வெளியே வந்தனர். குறிப்பாக படத்தின் இறுதியில் விஜய் நடித்த ஹிட் படங்களின் தொகுப்பு பலரையும் எமோஷ்னலாக்கியது. இந்தப் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 

இந்த நிலையில் அனிருத் விஜய்க்கு நன்றி தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஜனநாயகன், லியோ, பீஸ்ட், மாஸ்டர் மற்றும் கத்தி ஆகிய படங்கள் மூலம் உங்களுடன் பயணித்தது மிகவும் அற்புதமான மற்றும் உணர்வுப்பூர்வமான ஒரு அனுபவம்.  என்றென்றும் நான் போற்றிப் பாதுகாக்கும் நினைவுகளுக்கும், என் மீதான அளப்பரிய நம்பிக்கைக்கும் நன்றி விஜய் சார். இசை என்றும் நிலைத்திருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 



Source link