ஆந்திர துணை முதல் மந்திரியும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதி அடைந்து வந்தார். நேற்று முன்தினம் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்திக் கொண்டு இருந்தார். அப்போது பவன் கல்யாணுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஐதராபாத், ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பல்வேறு பரிசோதனைகள் மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டது.
மருத்துவ பரிசோதனை அறிக்கைகளின்படி டாக்டர்கள் நேற்று மாலை பவன் கல்யாணுக்கு காது,மூக்கு,தொண்டை அறுவை சிகிச்சை செய்தனர். பவன் கல்யாண் 10 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டுமென டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பவன் கல்யாண் முழு ஆரோக்கியத்துடனும், புத்துணர்ச்சியுடன் மீண்டும் திரும்பி வருவார் என தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
