துலாம்- வார ராசிபலன் 19.4.2026 முதல் 25.4.2026 வரை

துலாம்

மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும் வாரம்.ராசி அதிபதி சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவதால் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் அதிகரிக்கும். வாழவும் முடியாமல் மீளவும் முடியாமல் தவித்த நிலை மறையும். உங்கள் முயற்சி, எண்ணங்கள் நிறைவேறும். புதிய எண்ணங்கள் மற்றும் திட்டங்கள் தோன்றும்.

உங்களின் புகழ், அந்தஸ்தை உயர்த்த அதிகம் உழைக்க நேரும். உத்தியோகத்தில் ஸ்திர தன்மை ஏற்படும். வீடு மாற்றம், ஊர் மாற்றம், நாடு மாற்றம் என நல்ல விதமான மாற்றங்கள் ஏற்படும். சிலருக்கு விபரீத ராஜ யோகமாக அதிர்ஷ்ட பணம் பொருள் வரவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கடன், வட்டி தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள்.

தொட்டது துலங்கும். திருமணம், புத்திரப் பேறு, வீடு, வாகனம் போன்ற வாழ்வியல் மாற்றம் உண்டாகும். 19.4.2026 அன்று பகல் 12.31 மணி முதல் 21.4.2026 நள்ளிரவு 1.01 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற பேச்சுக்கள், வாக்கு வாதங்கள் குடும்ப உறவுகளிடம் கசப்பை ஏற்படுத்தும் என்பதால் வாக்கில் நிதானம் தேவை. தினமும் கருட கவசம் படிக்கவும்

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Source link