ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2160 குறைவு

சென்னை: சென்னையில் இன்று (ஜூலை 24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2160 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 840 ரூபாய்க்கும், கிராமுக்கு 270 ரூபாய் குறைந்து 13,230 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலை ஏற்ற, இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜூலை 22) ஆபரண தங்கம் கிராம், 13,430 ரூபாய்க்கும், சவரன், 1,07,440 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 245 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்றைய நிலவரம்

நேற்று (ஜூலை 23), தங்கம் விலை கிராமுக்கு, 70 ரூபாய் உயர்ந்து, 13,500 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 560 ரூபாய் அதிகரித்து, 1,08,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

இன்றைய நிலவரம்

இந்நிலையில் இன்று (ஜூலை 24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2160 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 840 ரூபாய்க்கும், கிராமுக்கு 270 ரூபாய் குறைந்து 13,230 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியும் சரிவு

வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து 240 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் சரிந்து 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Source link