சென்னை: ‘ஆறுகளில் துாய்மையான சூழலை உருவாக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் நெட்டிசன் ஒருவர், ‘காவிரி ஆற்றில், தொடர்ந்து குப்பைகளை கொட்டுவதும், தோஷம் கழிக்கிறேன் என, பழைய ஆடைகளை ஆற்றில் துாக்கி எறிவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக பவானி, கொடுமுடி, மோகனுார் கோவில்களில் இந்த நிலை உள்ளது’ என, பதிவிட்டிருந்தார்.
இதற்கு, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், ‘இது தொடர்பாக ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன. விரைவில், துாய்மையான சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என, பதில் அளித்துள்ளார்.
