“ஆ.ராசாவை கெட்ட வார்த்தையால் திட்டிய லெஃப்ட் பாண்டி” திமுக – தவெக மோதலால் தமிழகத்தில் பாயும் ஆபாச நதி? – left pandi uses foul words against a raja vulgar remarks surface amid dmk tvk political clash

முதலமைச்சர் விஜய்யை கண்டித்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுகவின் முக்கிய முன்னாள் அமைச்சர்களான மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் அளித்த பதில் உரை தொடர்பாக திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மு.க.ஸ்டாலின் மிசா காலத்தில் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக விஜய் தெரிவித்த கருத்துகளும், அவர் தாடையில் கை வைத்து செய்த சைகையும் சர்ச்சையை ஏற்படுத்தியதாக திமுகவினர் குற்றம்சாட்டினர்.

இதற்கு மு.க.ஸ்டாலின் ஏற்கனவே காணொளி மூலம் பதிலளித்திருந்த நிலையில், தற்போது திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆ.ராசாவின் கடும் விமர்சனம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆ.ராசா, முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார். விஜய் குறித்து “மகா நடிகன் அல்ல.. மகா அயோக்கியன்” என அவர் விமர்சித்ததுடன், மனிதத்தன்மை குறித்தும் கடுமையான கருத்துகளை முன்வைத்தார்.மேலும், விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவரது பெற்றோர் தொடர்பாகவும் ஆ.ராசா பேசியதாக தவெக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

தவெக நிர்வாகி லெப்ட் பாண்டி பதிலடி

இந்த நிலையில், ஆ.ராசாவின் பேச்சுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தேனி தெற்கு மாவட்டச் செயலாளர் லெப்ட் பாண்டி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கடுமையான வார்த்தைகளில் விமர்சித்ததுடன், திமுக விரைவில் அழிந்துவிடும் என்றும் அவர் பேசியுள்ளார். மேலும், திமுகவில் இருப்பவர்கள் பெரும்பாலும் வயதானவர்கள் என்றும், தவெகவில் உள்ள இளைஞர்கள் எழுச்சி பெற்றால் திமுகவால் அதை எதிர்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட விமர்சனங்களால் தீவிரமாகும் மோதல்

தொடர்ந்து பேசிய லெப்ட் பாண்டி, தங்களது தலைவர் விஜய் மற்றும் அவரது பெற்றோர் குறித்து ஆ.ராசா பேசியதற்கு கடுமையான முறையில் பதிலளிக்க வேண்டும் என தெரிவித்ததுடன், மிகவும் தரக்குறைவான வார்த்தைகளையும் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.இதனால், சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இடையே ஏற்பட்ட கருத்து மோதல், தற்போது திமுக மற்றும் தவெக நிர்வாகிகளின் நேரடி விமர்சனமாக மாறியுள்ளது.

“இது ஆரோக்கியமான அரசியல் அல்ல”

முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் திமுகவை விமர்சித்து, தமிழகத்தில் “ஆபாச நதி, வன்ம நதி” ஓடுவதாகக் குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது இரு கட்சிகளின் நிர்வாகிகளும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வருவது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை பெற்றுள்ளது.

ஆதவ் அர்ஜுனா பேச பேச திமுகவினர் கடும் கூச்சல்!

மக்களின் அடிப்படை பிரச்சினைகள், ஆட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் நலன் தொடர்பான விவாதங்களை முன்னெடுப்பதை விட, இரு தரப்பினரும் மேடைகளில் ஒருவரையொருவர் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது ஆரோக்கியமான அரசியலுக்கு உதவாது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இதனால், விஜய் தலைமையிலான தவெக மற்றும் திமுக இடையேயான அரசியல் மோதல் அடுத்தடுத்த நாட்களில் மேலும் தீவிரமடையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Source link