ஆ. ராசா மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு: சேகர் பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீதும் பாய்ந்த வழக்கு

சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது முதலமைச்சர் விஜய், தி.மு.க மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார். நிராகரிக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் அறிக்கை, வீராணம் திட்டம் மற்றும் அமலாக்கத்துறை ஆவணங்களைக் குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்தார். மேலும் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டது குறித்து பேசும்போது, அவர் செய்த சைகை மு.க.ஸ்டாலினை உருவக் கேலி செய்யும் விதமாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

உங்களுக்கு வேல செய்யுறதுக்கு நான் வரல; பிக்பாஸ் வீட்டில் வெடித்த பிரளயம்; டார்கெட் யார் தெரியுமா?

இதற்கு தி.மு.க மட்டும் இன்றி த.வெ.க-விற்கு ஆதரவு தெரிவித்த இடதுசாரி கட்சிகள் உட்பட பலர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல், விஜய்யின் மிசா குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கொடுத்து முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இதற்கிடையில், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவமதிக்கும் வகையில் பேசியதாக தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யைக் கண்டித்து தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த 12-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க எம்.பி ஆ.ராசா, முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்து பேசினார். ஆ.ராசாவின் பேச்சுக்கு த.வெ.க-வினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல், இப்படி பேசுபவர்களை வெளிப்படையாக ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என்று வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையில் பேசிய ஆ.ராசா மீது சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. த.வெ.க நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், அமைதியை குலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பேசுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் ஆ.ராசா மீது சைதாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே தி.மு.க முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீதும் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், கள்ளக்குறிச்சியில் தி.மு.க எம்.எல்.ஏ வசந்தம் கார்த்தியேகன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Source link