இங்கிலாந்து அணி தடுமாற்றம்

பர்மிங்காம்: மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து பவுலர்கள் விக்கெட் வீழ்த்த முடியாமல் தடுமாறினர்.

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதும் 3வது டெஸ்ட், பர்மிங்காமில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 133, இங்கிலாந்து 453 ரன் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில், பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 52/2 ரன் எடுத்திருந்தது. அவைஸ் (29), மசோத் (21) அவுட்டாகாம் இருந்தனர்.

மூன்றாம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு அசான் அவைஸ், ஷான் மசோத் ஜோடி நம்பிக்கை தந்தது. இருவரும் அரைசதம் விளாசினர். இவர்களை பிரிக்க முடியாமல் இங்கிலாந்து பவுலர்கள் தடுமாறினர். மூன்றாவது விக்கெட்டுக்கு 125 ரன் சேர்த்த போது லாரன்ஸ் பந்தில் அவைஸ் (59) அவுட்டானார். அட்கின்சன் ‘வேகத்தில்’ மசோத் (95) சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

அடுத்து வந்த கேப்டன் பாபர் ஆசம் (76), தன்பங்கிற்கு அரைசதம் கடந்தார். சவுத் ஷகீல் (29), காசி கோரி (16), முகமது இம்ரான் (4) நிலைக்கவில்லை. ராசாவுல்லா அரைசதம் கடந்தார்.

பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 422/8 ரன் எடுத்து, 102 ரன் முன்னிலை பெற்றிருந்தது. ராசாவுல்லா (67), முகமது அபாஸ் (36) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் அட்கின்சன் 3, ராபின்சன் 2 விக்கெட் கைப்பற்றினர்.

Source link