“இசையமைப்பாளராகவும் லோகேஷ் உருவெடுப்பார்…” – வாமிகா கபி எதிர்பார்ப்பு!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் படம் ‘டிசி’. இப்படம் மூலம் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தில் வாமிகா கபி நாயகியாக நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். முழு நீள ஆக்சன் படமாக இப்படம் உருவாகிறது. படத்தின் டைட்டில் டீசர் கடந்த நவம்பர் மாதம் வெளியாகியிருந்தது. 

இதைத்தொடர்ந்து படத்தின் கிளிம்ப்ஸ் கடந்த பிப்ரவரியில் வெளியாகியிருந்தது. தொடர்ந்து ட்ரெய்லர் கடந்த மே மாதம் வெளியாகியிருந்தது. இதில் இடம் பெற்றிருந்த பின்னணி இசை ரசிகர்களின் வரவேற்பை பெற்று சமூக வலைதளங்களில் வைரலானது. இப்படம் இம்மாதம் 31ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 7ஆம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய வாமிகா கபி, “இயக்குநர் லோகேஷ் கனகராஜின் தீவிர ரசிகன் நான், ஆனால் அவருடன் நடித்த பிறகு, இப்போது நடிகர் லோகேஷின் தீவிர ரசிகனாகவும் மாறிவிட்டேன். அடுத்த முறை அவர் இசையமைப்பாளராகவும் உருவெடுப்பார் என்று நினைக்கிறேன்” என்றுள்ளார். 

Source link