மாணவர்களின் 3 கோரிக்கைகளும் ஏற்பு; போராட்டம் நிறைவு!

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த இளைஞர்களின் போராட்டம், கடந்த ஒரு வார காலமாக நாடு முழுவதும் விரிவடைந்தது. நாளுக்கு நாள் தொடர்ந்து போராட்டம் வலுவடைந்து வந்த நிலையில், அது ஆளும் பாஜக அரசிற்கு கடும் நெருக்கடியாக மாறியது. இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கரப்பான் பூச்சி மக்கள் கட்சியின் நிர்வாகிகளுடன் ஒன்றிய அரசு நேற்று பேச்சு வார்த்தை நடத்தியது.   

இந்த பேச்சுவார்த்தையில், அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும், நீட் தேர்வால் உயிர் இழந்த மாணவர்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களின் மீதான வழக்கை ரத்து செய்தல் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன் வைத்தனர்.   

இன்று (25-07-26) காலையில், போராட்டம் தொடரும் என்று கரப்பான் பூச்சி கட்சியினர் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு அழைப்பு விடுத்தனர். இதனைத் தொடர்ந்து, தர்மேந்திர பிரதான் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் இன்று ஒன்றிய அமைச்சர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், போராட்டத்தில் முன் வைக்கப்பட்ட இளைஞர்களின் 3 கோரிக்கைகளும் அரசால் ஏற்கப்பட்டது.  

இதையடுத்து, போராட்ட களத்தில் இருந்த மாணவர்களும் இளைஞர்களும்  தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதையடுத்து, கரப்பான் பூச்சி கட்சியினர், இத்துடன் போராட்டம் நிறைவு பெற்றதாக அறிவிப்பு செய்தனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் அனைவரும் வீடு திரும்புமாறு அவர்கள் வேண்டுகோள் வைத்தனர்.  

இது சம்பந்தமாக அவர்கள் கூறுகையில், ”இது மாணவர்களுக்குக் கிடைத்த வெற்றி. வருகின்ற ஆகஸ்ட் 15 என்பது இளைஞர்களின் சுதந்திர தினம்” என்று தெரிவித்தனர்.  

Source link