இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக கோ. ஜானகிராமன் களம் இறக்கப்பட்டுள்ளார். அதே போன்று தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு மு. கார்த்திகா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதிக்கு ச. கார்த்திக் குமாரி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு, கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும், பாசறைகளின் நிர்வாகிகளும் மற்றும் நாம் தமிழர் கட்சியினரும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை நல்கி அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ஆம் தேதி (09.09.2026) தொடங்கியது. அதன்படி செப்டம்பர் 16ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 17இல் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, மனுக்களைத் திரும்பப் பெறச் செப்டம்பர் 19ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அதனைத் தொடர்ந்து அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் பதிவான வாக்குகள் அக்டோபர் 9 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளன.
