இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்; கோல்கத்தா விமான நிலையத்தில் பரபரப்பு

கோல்கத்தா: தாய்லாந்தின் பூக்கெட் நகரில் இருந்து கோல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு இண்டிகோ விமானம் வந்தது. அதன் கழிவறையில் விமானத்திற்குள் வெடிகுண்டு இருப்பதாக லிப்ஸ்டிக் மூலம் எழுதப்பட்டிருந்தது.

இதைப் பார்த்த விமானிகள் உடனடியாக கோல்கத்தா விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். விமானம் தனிமைப்படுத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

சிஐஎஸ்எப், வெடிகுண்டு நிபுணர் குழுவினர் வரவழைக்கப்பட்டு, விமானத்தில் சோதனை செய்யப்பட்டது. விமானத்தில் சந்தேகம் அளிக்கும் விதமாக, எந்தப்பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. பரபரப்பை ஏற்படுத்த யாரோ ஒரு பயணி இந்த வேலையை செய்திருப்பது உறுதியானது. அது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று (அக்.,23) கோல்கத்தா வந்த விமானத்தில் இதேபோன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனையில் அது புரளி என தெரிய வந்தது.

Source link