லாரி உரிமையாளரிடம் ரூ.5,000 லஞ்சம்; சிறப்பு எஸ்.ஐ., ஆயுதப் படைக்கு மாற்றம்

–நமது நிருபர்-

திருநெல்வேலி பேட்டை சேர்ந்த பாலசுப்பிரமணியனுக்கு சொந்தமான நான்கு லாரிகளில் ஒன்று, மணல் திருட்டு வழக்கில் சீதபற்பநல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் உள்ளது.

இந்த வழக்கில் லாரி டிரைவர் நாகராஜன் கைது செய்யப்பட்டார். லாரி உரிமையாளர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமின் பெற்று நிபந்தனைப்படி கையெழுத்திட்டு வருகிறார்.

கடந்த அக்.21ல் லாரியை எடுப்பதற்கான நடவடிக்கையின்போது, அவரை மிரட்டி போலீஸ் ஒட்டுவின் மனைவியின் வங்கிக் கணக்கு மூலம் ரூ.5,000 பெற்றதாக சிறப்பு எஸ்.ஐ., முத்துப்பாண்டி மீது புகார் எழுந்தது.

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி., விஸ்வேஷ் பாலசுப்பிரமணிய சாஸ்திரி விசாரணை நடத்தினார். புகாரின் அடிப்படையில் முத்துப்பாண்டியை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

Source link