மும்பை:
இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியதாவது:
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நான்கு முறை அமெரிக்கா வந்துள்ளார். எங்களின் முக்கியமான வர்த்தகம் மற்றும் வணிக கூட்டாளி இந்தியா. குவாட் அமைப்பின் முக்கிய உறுப்பினர்
அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்துவது இல்லை. ஆனால், என்ன நடக்கிறது என தெரிந்து கொள்வோம். ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில் உள்ளது. விரைவில் அது நடக்கும் என நினைக்கிறேன். விரைவில் நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கை உள்ளது.
எண்ணெய் சுத்திகரிப்பில் இந்தியா வல்லரசு. கடினமான கச்சா எண்ணெயையும் சுத்திகரிக்கும் திறன் இ ந்தியாவிடம் உள்ளது. கடந்த காலங்களில் இதனை செய்துள்ளார்கள். வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் உற்பத்திக்கு வரும்போது அவர்களால் இதைச் செய்ய முடியும் என நினைக்கிறேன். சலுகை காரணமாக வெனிசுலா கச்சா எண்ணெயை இந்தியாவே அதிகமாக உற்பத்தி செய்ய முடியும்.
உலகளவில் ஏற்படும் பற்றாக்குறையை வெனிசுலாவால் மட்டுமே சரி செய்ய முடியும் என நான் கூறவில்லை. ஆனால், காலப்போக்கில் அதனை சரி செய்யும்.குறுகிய காலத்திற்கு நிச்சயம் உதவும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தியாவுடன் கடந்த காலங்களில் அதனை பேசி உள்ளோம். அவர்களும் தயாராக உள்ளனர். தடைகள் போன்ற பல இடையூறு இருக்கலாம். அவற்றை நாம் கடந்து செல்ல வேண்டியிருக்கும்.
இந்தியா தனது எரிசக்தி இறக்குமதியை பன்முகப்படுத்தும் விருப்பத்தை வெளிப்படுத்தியது புத்திசாலித்தனமான செயல். இதனை ஒரே நாளில் செய்ய முடியாது. அந்த விஷயத்தில் இந்தியா கணிசமான அளவு முன்னேற்றம் அடைந்தது. அதை கண்டு மகிழ்ச்சி அடைகிறோம். இவ்வாறு மார்கோ ரூபியோ கூறினார்.
