கனடா ராணுவ முகாமில் பயங்கர தீ; வீரர்கள் பலி

ஒட்டாவா: கனடாவின் அல்பெர்ட்டா மாகாணத்தில் அந்நாட்டுக்கு சொந்தமான மிகப்பெரிய ராணுவ தளம் உள்ளது. இங்கு 690 ராணுவ வீரர்களும், 300 அதிகாரிகளும் பணியாற்றி வருகின்றனர்.

1950களில் கொரியப் போரின் போது, இது கனடா வீரர்களின் ராணுவப் பயிற்சி முகாமாக செயல்பட்டது. இங்கு நேற்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. ஏராளமான ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். உயிரிழந்த வீரர்களின் சரியான எண்ணிக்கை பற்றிய விபரம் வெளியிடவில்லை.

ராணுவ பயிற்சிப் பகுதியில் பற்றிய தீ, மற்ற பகுதிகளுக்கும் பரவியதாக கூறப்படுகிறது. இது குறித்து ராயல் கனடா போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த சம்பவத்திற்கு கனடா பிரதமர் மார்க் கார்னி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் தளப்பதிவு; அல்பெர்ட்டா மாகாணத்தில் உள்ள ராணுவத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில், தைரியமிக்க ராணுவ வீரர்களும், வீராங்கனைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய சூழல் குறித்து அல்பெர்ட்டா மாகாண அரசுடன் தொடர்ந்து கேட்டறிந்து வருகிறோம். நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Source link