இந்தியா-ஈரான் பேச்சு வார்த்தை; எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா

கிர்​கிஸ்​தான் தலைநகர் பிஷ்கெக்​கில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு கூட்​டமைப்​பின் (எஸ்​சிஓ) உச்சி மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இந்த கூட்​டமைப்​பில் சீனா, ரஷ்​யா, இந்​தி​யா, உஸ்பெகிஸ்தான், கிர்​கிஸ்​தான், ஈரான், பெலாரஸ், கஜகஸ்​தான், பாகிஸ்​தான், தஜிகிஸ்​தான் உள்ளிட்ட நாடுகள் உறுப்​பினர்​களாக உள்​ளன. இதில் இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்​பிங் உட்பட பல்வேறு உறுப்பு நாடு​களின் தலைவர்​கள் பங்​கேற்றனர்.

இந்த மாநாட்​டில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கி​யான், கிர்​கிஸ்​தான் அதிபர் சாதிர் ஜபரோவ், அர்​மீனியா பிரதமர் நிகோல் பாஷின்​யான், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி தனித்​தனியாகச் சந்​தித்​துப் பேசி​னார்.  

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர், கடந்த ஆறுமாதகாலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே, ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையும்  விதித்துள்ளது. இந்நிலையில், ஈரான் அதிபரைப் பிரதமர் நரேந்திர மோடி தனியாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.   

இந்நிலையில், நரேந்திர மோடி – மசூத் பெசெஷ்கி​யான் சந்திப்பின்போது இந்தியா மற்றும்  ஈரான் இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்துப் பேசப்பட்டதா? என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

இதற்குப் பதிலளித்த அவர், “இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எனினும், அமெரிக்கா விதித்துள்ள தடைகளை மீறி, ஈரான் வருவாய் ஈட்ட உதவும் வகையில் செயல்படும் நாடுகள் மீதும் அமெரிக்க அரசு பொருளாதாரத் தடை விதிக்கும்” என எச்சரித்துள்ளார்.  

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் தொடங்கியது முதலே, இருநாடுகளுடனும் உறவுகளைக் கடைப்பிடிப்பது இந்தியா போன்ற நடுநிலையான நாடுகளுக்கு சவாலான ஒன்றாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.   

Source link