இந்தியா பெண்களின் அதிகாரத்தை பறித்துவிட்டு கொண்டாட்டமா? மு.க.ஸ்டாலினை விமர்சித்த இபிஎஸ் .. – edappadi palanisamy tweets that tamil nadu has lost 20 more mp seats because of mk stalin

நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரின் நீட்சியாக ஏப்.14 முதல் சிறப்பு அமர்வு நடைபெற்றது. இந்த அமர்வில் தொகுதி மறுவரையறை மசோதா, மகளிர் இடஒதுக்கீடு மசோதா மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 131-வது திருத்த மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாக்களை நிறைவேற்றுவது தொடர்பான விவாதங்கள் மற்றும் வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது, மக்களவையில் மொத்தம் 489 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் மசோதாவிற்கு ஆதரவாக 278 வாக்குகளும், எதிராக 211 வாக்குகளும் பதிவாகி இருந்தன.

சாதாரண மசோதாவாக இருந்திருந்தால் எளிதாக நிறைவேறி இருக்கும். இது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 131-வது திருத்த மசோதா என்பதால், அவையில் கலந்துக்கொண்ட உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) பேரின் ஆதரவு கட்டாயமாக தேவைப்பட்டது. ஆனால், வாக்கெடுப்பின் போது இந்த இலக்கு எட்ட முடியாததால், மசோதா தோல்வியில் முடிந்தது. இந்த மசோதாவை அறிமுகம் செய்வதாக ஒன்றிய அரசு அறிவித்தது முதலே தென் மாநிலங்களில் இதற்கு வலுவான எதிர்ப்பு கிளம்பி இருந்தது.

இந்நிலையில், மசோதா தோல்வியடைந்ததை அடுத்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் “டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், வருகின்ற ஏப்ர. 23 ஆம் தேதி நடைபெறும் நிகழ்வுகளில் மத்திய அரசின் தன்னிச்சையான போக்கையும், அதற்கு துணை போகும் தரப்பினரையும் மக்கள் முழுமையாக வீழ்த்துவார்கள் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், மக்களவை – பேரவைகளில் 33 சதவீத மகளிர் இடஒதுக்கீட்டை 2029 ஆம் ஆண்டு முதல் அமலாக்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா, அதற்கு ஏதுவாக மொத்த மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 543 இல் இருந்து 850 ஆக அதிகரிக்கும் தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் அதற்கு வகை செய்யும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 131-வது திருத்த மசோதா உள்பட மூன்று மசோதாக்களும் தோல்வி அடைந்ததற்கு காரணமான திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்து அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் (X) பக்கத்தில் ட்வீட் பதிவிட்டுள்ளார்.

அதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, நீங்கள் ஒரு பொம்மையைப் போலச் செயல்பட்டு, இந்த வாய்ப்பின் முக்கியத்துவத்தை புரிந்துக் கொள்ளாமல், மசோதாவை கண்மூடித்தனமாக எதிர்த்தீர்கள். இதன் மூலம் மகளிர் மசோதாவை தடுத்து இந்தியா முழுவதும் உள்ள பெண்களுக்கு ஸ்டாலின் அநீதி இழைத்துள்ளார். பெண்கள் அதிகாரமயமாக்கலுக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பை சீர்குலைத்துவிட்டீர்கள். இதை தான் வெற்றி என்று கொண்டாடுகிறீர்களா? என்று காட்டமாக பேசியுள்ளார்.

விஜய் – ராகுல் நெருக்கமா இருக்காங்க?

அதுமட்டுமல்லாமல், பிரதமர் வழங்கிய 50 சதவீத கூடுதல் இடங்கள் பெறுவதற்கான பொன்னான வாய்ப்பு உங்களால் இழக்க நேரிட்டுள்ளது. நியாயமாக சேர வேண்டிய 20 எம்பி தொகுதிகளை பெறுவதற்கான வாய்ப்பை தமிழ்நாடு தவறிவிட்டது. எதை நீங்கள் சரியாக கொண்டாடி உள்ளீர்கள்? தமிழகத்தின் எதிர்காலத்துக்கு ஏற்படுத்திய பாதிப்பையா? என்று திமுக அரசை விமர்சித்துள்ளார்.

Source link