இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு யுஏஇ நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு

ஜெருசலேம்: துபாயில் இருந்து 174 பயணிகளுடன் இஸ்ரேல் நோக்கி சென்ற விமானத்தை தரையில் மோத சதித்திட்டம் தீட்டியதை இந்திய விமானி ஸ்மித் மச்சார் தடுத்தார். துணை விமானியிடம் போராடி, பலரது உயிர்களை காப்பாற்றினார். இந்த சண்டையில் பலத்த காயமடைந்த மச்சார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்திய விமானியின் துணிச்சலுக்கு உலகம் முழுதும் பாராட்டுகள் குவிந்தன. குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகம், அந்நாட்டின் உயரிய விருதை அறிவித்தது. இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்று தீபம் ஏற்ற வருமாறு ஸ்மித் மச்சாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பொதுமக்கள் துணிச்சல் விருதையும் அந்நாடு அறிவித்தது.

சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன ஸ்மித் மச்சாருக்கு, ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ‘முதல் வகுப்பு சயீத் 2’ வழங்கி கவுரவிக்கப்பட்டது. துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் இந்த விருதை வழங்கினார்.

மேலும், யுஏஇ அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ஆகியோர் நேரில் அழைத்து விமானக் குழுவினரின் துணிச்சலையும், அர்ப்பணிப்பையும் பாராட்டினர்.

Source link