இந்த வாரம் ரிலீஸாகும் 5 படங்கள்

1. ஐ, எம் கேம் (I, M Game) :

மெகா ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானின் சொந்தப் படம் இது. நாயகனாக நடித்துப் படத்தையும் தயாரித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாகக் கயாடு லோஹர் நடித்திருக்கிறார். சம்யுக்தா விஸ்வநாதன், ஆண்டனி வர்க்கீஸ், கதீர், வினய் போர்ட் போன்றவர்கள் முக்கிய ரோல்களில் நடித்திருக்கிறார்கள். மிஷ்கின் ஒரு வித்தியாசமான கேரக்டரில் வருகிறார்.

மம்முட்டி, மோகன்லால் இருவரும் ஒரு சீனில் கெஸ்ட் ரோலில் வருகிறார்கள்.

சீதாராமம் (2022) ஹிட், கிங் ஆஃப் கோதா (2023) தோல்வி, லக்கி பாஸ்கர் (2024) பிளாக்பஸ்டர் ஹிட், காந்தா (2025) சுமார் என வரிசையாக நான்கு படங்கள் மாறி மாறி வெற்றி, தோல்விகளைச் சந்தித்த துல்கருக்கு இது வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இவரது சொந்தப் படமான லோகா சேப்டர் 1 (2025) மெகா ஹிட்.

ஆர்டிஎக்ஸ் (2023) என்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய நஹாஸ் ஹிதாயத் தான் இந்தப் படத்தை இயக்குகிறார்.

டிரெய்லரைப் பார்த்து யூகித்த கதை:

நாயகன் சூதாட்டத்தில் கில்லாடி. அது சீட்டு விளையாட்டாக இருந்தாலும் சரி, கிரிக்கெட் மேட்ச் பிக்சிங்காக இருந்தாலும் சரி; அதில் பட்டையைக் கிளப்பிப் பணம் சம்பாதிக்கிறான். எதிர்பாராத விதமாக ஒரு தோல்வியைச் சந்திக்க, மனரீதியாகப் பாதிக்கப்படுகிறான். ட்ரீட்மெண்ட்டுக்காக ஒரு லேடி டாக்டரிடம் சைக்கலாஜிகல் ட்ரீட்மெண்ட் எடுக்கிறான். அவள்தான் நாயகி. நாயகியை நாயகன் காதலிக்க, அவள் அந்தக் காதலை ஏற்கவில்லை. இதன்பின் நிகழும் சம்பவங்கள்தான் மீதித் திரைக்கதை.

Source link