தற்போது சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்கான செயல்பாட்டுச் செலவு 12% முதல் 15% ஆக உள்ளது. இது புதிய முறையில் 3% முதல் 4% ஆகக் குறையும். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 முதல் ரூ.7,000 கோடி வரை லாபம் கிடைக்கும்.
இந்த தடையற்ற டிஜிட்டல் முறையினால், அரசின் சுங்கக் கட்டண வருவாய் ஆண்டுக்கு கூடுதலாக ரூ.10,000 கோடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதலாக, வாகன ஓட்டிகள் தங்களின் FASTag கணக்கை எளிய முறையில் வேறு வங்கிக்கு மாற்றிக் கொள்ள உதவும் ‘One Tag’ என்ற புதிய வசதியையும் Rajmarg Yatra செயலியில் அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
