இலங்கை அணி அபாரம்: வெளியேறியது பாக்.,

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் பைனலுக்கு முன்னேறியது இலங்கை அணி. அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), பெண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் (‘டி-20’) 10வது சீசன் நடக்கிறது. முதல் அரையிறுதியில் வங்கதேசத்தை வென்ற இந்தியா, பைனலுக்கு முன்னேறியது.

நேற்று இரண்டாவது அரையிறுதி போட்டி நடந்தது. இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

பாகிஸ்தான் அணிக்கு முனீபா அலி (2), ஷாவல் ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது. ஷாவல் (24), பெரோஷா (21) சற்று கைகொடுத்தனர். பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 130/5 ரன் எடுத்தது. கேப்டன் பாத்திமா சனா 47 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

இலங்கை அணிக்கு கேப்டன் சமாரி அத்தபத்து (5), இமேஷா (22) ஜோடி துவக்கம் தந்தது. சஞ்சனா (0), ஹாசினி (3) கைவிட, ஹர்ஷித்தா 36 ரன் எடுத்து உதவினார். கவிஷா (33) அவுட்டாக திருப்பம் ஏற்பட்டது. பின் வந்த நிலாக்சிகா (13), கவுஷிஜனி (14) இணைந்து வெற்றியை உறுதி செய்தனர்.

இலங்கை அணி 18.5 ஓவரில், 132/6 ரன் எடுத்து, 4 விக்கெட்டில் வெற்றி பெற்றது. நாளை நடக்கும் பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோத உள்ளன.

Source link