‘இளைஞர்களுக்கு நன்றி’; பிரதமர் நரேந்திர மோடி உருக்கம்

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். அதே போல, ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான மாணவர்கள் இந்த தேர்வை எழுதி வருகின்றனர். மாணவர்கள் அதிகப்படியான நேரத்தையும், நிதியையும் செலவு செய்து இந்த தேர்விற்காகத் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், சிலர் தங்களின் சுய லாபத்திற்காக வினாத்தாளை கசிவு உள்ளிட்ட முறைகேடான சம்பவங்களில் ஈடுபடுவதாக எழுந்த விவகாரம், தற்போது நாடு முழுவதும் விவாதங்களை தூண்டியுள்ளது.  

இந்த தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென, இளைஞர்களின் இந்த போரட்டம் தோடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த ஜூலை 20 அன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதனால், நாளுக்கு நாள் இந்த போராட்டம் நாடு முழுவதும் வலுவடைந்து வருகிறது. இந்த போராட்டம் ஒன்றிய அரசுக்கு மிகவும் நெருக்கடியான சூழலை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இளைஞர்களின் எதிர்காலம் தான் முக்கியம். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.   

இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் கோடிக்கணக்கான பார்வையாளர்களை கடந்து வைரலானது. இதையடுத்து, இந்த வீடியோ அதிகப்படியான பார்வையாளர்களைக் கடந்து வைரலானதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில் ”நண்பர்களே… எனது முந்தைய வீடியோவை பார்த்ததற்கு மிகவும் நன்றி. நீங்கள் அளித்த ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி” என்று தெரிவித்திருந்தார்.  

Source link