தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் காவல் மரணங்கள் குறித்து த.வெ.க. அரசை மிகக் கடுமையாகக் கண்டித்துள்ள முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பொறுப்புக்கூறலும், மன்னிப்புக் கோருதலும் தற்போதைய முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளா?” எனத் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிச் சாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் ‘தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது? எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?
Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா? உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிறங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்!’ என தெரிவித்துள்ளார்.
