இளையராஜா கூட்டணியில் உருவாகும் 25-வது படம்; டைட்டில் இதுதான்: எகிறும் எதிர்பார்ப்பு

தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக இருந்து, ஒரு சில படங்களில் துணை கேரக்டரில் நடித்தவர் தான் ராமராஜன். 1978-ம் ஆண்டு வெளியான ‘மீனாட்சி குங்குமம்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமான ராமராஜன், தொடர்ந்து, ’தெருவிளக்கு’, ’சிவப்பு மல்லி’, சிவாஜி நடித்த ’சூரக்கோட்டை சிங்கக்குட்டி’, ’சட்டத்தை திருத்துங்கள்’ உள்ளிட்ட பல படங்களில் துணை கேரக்டரில் நடித்திருந்தார்.

எல்லை தாண்டிய மனிதநேயம்: எக்ஸ்பிரஸ் வாசகர்கள் அளித்த உதவியால் உயிர்களைக் காக்கும் நேபாள கிராமப்புற மருத்துவமனை

1986-ம் ஆண்டு வெளியான ’நம்ம ஊரு நல்ல ஊரு’ என்ற படத்தின் மூலம் ராமராஜன் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றிருந்தது. இதையடுத்து, ’எங்க ஊரு பாட்டுக்காரன்’, ’வில்லு பாட்டுக்காரன்’, ’கரகாட்டக்காரன்’, ’நம்ம ஊரு மாப்பிள்ளை’, ’அம்மன் கோயில் வாசலிலே’ உள்ளிட்ட சில படங்களை இயக்கி, நடித்து வெற்றிக் கண்டார்.

ராமராஜன் கடைசியாக கடந்த 2001-ம் ஆண்டு ‘சீறிவரும் காளை’ படத்தை இயக்கி நடித்திருந்தார். 12 ஆண்டுகளுக்கு பிறகு 2024-ஆம் ஆண்டு வெளியான ’சாமானியன்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், நடிகர் ராமராஜன் தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். அறிமுக இயக்குனர்  காசி​மாயன் கதை, திரைக்​கதை எழு​தி இப்படத்தை இயக்​கு​கிறார். வசனத்தை ராஜகோ​பால், எம்.அடைக்​கலம் இரு​வரும் எழுதுகின்​றனர். 

இந்த படத்தில் செந்​தில், கோவை சரளா இரு​வரும் நீண்ட இடைவெளிக்​குப் பிறகு ராம​ராஜனுடன் இணை​கின்​றனர். இப்​படத்தின் பணி​கள் பாடல் பதிவுடன் தொடங்​கியது. அதை தொடர்ந்து படப்​பிடிப்​புக்​கான பணி​கள்​ நடை​பெற்​று வருகின்​றன. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இளை​ய​ராஜா, ராம​ராஜன் இணை​யும் இந்த படத்திற்கு ‘கட​வுள் தந்த பரிசு’ என்று டைட்டில் வைக்கப்பட்டு உள்ளது.

ராமராஜன் – இளையராஜா கூட்டணியில் உருவாகும் 25-வது படம் இதுவாகும். நீண்ட இடைவெளிக்கு பிறகு ராமராஜனும் இளையராஜாவும் இணைந்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source link