ஈரோடு பரப்புரையில் உதயநிதியை ஷாக்காக்கிய தொண்டர்கள்.. இபிஎஸ் பற்றி சொன்ன வார்த்தை – udhayanidhi stalin criticized edappadi palaniswami saying he should be sent home

சட்டமன்ற 2026 தேர்தல் பரப்புரையில் போட்டோ காண்பிப்பது பெரியளவில் டிரெண்டாகி விட்டது. அதாவது அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தங்களது எதிரான கட்சி தலைவர்களை விமர்சனம் செய்யும் வகையில் ஏதாவது ஒரு புகைப்படத்தை மக்களிடம் காட்டி வருகின்றனர். இதனிடையில் இபிஎஸ்ஸுடன் அஜித், தோனி இருப்பதை போன்ற போட்டோக்களை தொண்டர்கள் அவரிடம் வழங்கி கொண்டிருக்கின்றனர். இது இணையத்தில் பெருமளவில் கவனம் ஈர்த்து வருகிறது.

போட்டோ டிரெண்ட்
இதனிடையில் துணை முதலமைச்சார் உதயநிதி ஸ்டாலின் தனது தேர்தல் பரப்புரைகளில் இபிஎஸ் புகைப்படத்தை காட்டி பிரச்சாரம் செய்து வருவது பெருமளவில் பேசுபொருளாகியுள்ளது. அதாவது சசிகலா காலில் விழுந்து பதவி வாங்கி விட்டு, பின் அவரின் காலையே இபிஎஸ் வாரி விட்டதாக சொல்லி போட்டோக்களை காண்பித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின் . சில பரப்புரைகளில் அவரிடம் அங்கு கூடியிருக்கும் தொண்டர்களே போட்டி காண்பிக்குமாறு கேட்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

உதயநிதி ஸ்டாலின் பரப்புரை
இந்நிலையில் ஈரோடு பரப்புரையில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலினிடம், அங்குள்ள தொண்டர்கள் பிளக்ஸ் போட்டோ தயாரித்து அவரிடம் கொடுத்து காண்பிக்க சொன்னார்கள். இதனையடுத்து அவர்கள் கொடுத்ததை பிரித்து காண்பித்து பிளக்ஸாவே அடிச்சுட்டீங்களா. இதை நான் எடுத்துட்டு வரலை. நான் பொறுப்பு கிடையாது. இதையெல்லாம் என் கணக்குல எழுதக்கூடாது என்றார். அதனை தொடர்ந்து பிளக்ஸில் எழுதப்பட்ட பத்து தோல்வி பழனிசாமி என்ற வாசகத்தை படித்தார்.

மொத்த தோல்வி பழனிசாமி
இந்த தடவை அவரை மொத்த தோல்வி பழனிசாமி ஆக்கி, வீட்டுக்கு அனுப்பனும் என்றார். அதன்பின்னர் அவரிடம் கயிறு கட்டி போட்டோ ஒன்றை அனுப்பி வைத்தனர். அதனை பார்த்து ஷாக்கான உதயநிதி ஸ்டாலின், கோயம்புத்தூர் குசும்பு கேட்டு இருக்கேன். இது ஈரோடு குசும்பா இருக்கு என்று போட்டோவை எடுத்தார். அதன்பின்னர் இபிஎஸ் தன்னை கன்னாபின்னாவென்று திட்டுவதாகவும், இருந்து உயிரை வாங்குறான். செத்து போன்னு வேற சொல்லிட்டார் என்றார்.

இபிஎஸ் பதிலடி
உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து தனது பரப்புரைகளில் மக்களிடம் உரையாடுவதை போன்று எளிமையாக பேசி வருகிறார். இதனால் அவருடைய பிரச்சாரம் பெரியளவில் கவனம் ஈர்த்து வருகிறது. இதனிடையில் இபிஎஸ் தனது பரப்புரைகளில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி தன்மீது வைக்கும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். அவருக்கு ஆதரவாக அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் பதிலடி கொடுத்து கொண்டிருக்கின்றனர்.

திமுகவின் முதல் வெற்றி
இதனிடையில் ஈரோடு பரப்புரையில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ஒன்றிய பாஜக அரசு நமக்காக ஏதாவது உதவி பண்ணாங்களா. நிதி வந்துச்சா. கல்வி நிதியை கொடுக்கலை. மும்மொழி கொள்கையை ஏத்துக்க சொல்றாங்க. நேத்து தொகுதி மறுவரையறை தோற்கடிக்கப்பட்டு தலைவருக்கு மிகப்பெரிய கிடைத்துள்ளது. திமுக, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்து முதல் வெற்றி என்றார்.

செங்கோட்டையன் மீது கடும் விமர்சனம்
முன்னதாக உதயநிதி ஸ்டாலினுக்கு முன்பாக ஈரோட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது செங்கோட்டையன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதிமுகவை உடைக்க துணை போனார். கட்சியில் யாரையும் வளர விடாமல், பலர் வெளியேற காரணமாக இருந்தார். இவரை கட்சியில் வைத்திருந்ததே தவறு என ஜெயலலிதா தன்னிடம் தெரிவித்தாக செங்கோட்டையன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது இபிஎஸ்.

Source link