எனவே அருகில் உள்ள வங்கிக்கு சென்று உங்களிடம் உள்ள கிழிந்த அல்லது அழுக்கடைந்த ரூபாய் நோட்டுகளை எந்தவொரு வங்கி கிளைகளிலும் இலவசமாக மாற்றிக்கொள்ளலாம். இதற்காக எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் வங்கியின் வாடிக்கையாளராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் கூட இந்தியாவில் உள்ள எந்த வங்கியிலும் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம். பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் இந்த சேவையை வழங்குகின்றன.
மேலும் உங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுக்களின் சேதத்தின் அளவுக்கு ஏற்ப முழு மதிப்பு அல்லது பாதி மதிப்பு வழங்கப்படும். அதாவது, ரூபாய் நோட்டில் சேதம் அதிகமாக இருந்தால், அதிக அளவில் தீயில் எரிந்தோ அல்லது குறிப்பிடத்தக்க பகுதிகள் காணாமல் போயிருந்தால் அதற்கு குறைந்த அளவே தொகை கிடைக்கும்.
இந்த ரூபாய் நோட்டுக்களை வங்கியின் மூலமாக ஏதாவது கட்டணம் செலுத்த பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது வங்கிக் கணக்கில் டெபாசிட்டும் செய்து கொள்ளலாம்.
பணமற்று மற்றும் சேமிப்பு வசதி இல்லாத வங்கிகளில் (non-chest banks) 30 நாட்களில் மாற்றிக் கொள்ள முடியும்.
