ரியாலிட்டி ஷோக்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் விஜய் டிவியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகும் ஷோ பிக்பாஸ். இதுவரை 9 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 10-வது சீசன் கடந்த செப்டம்பர் 6-ந் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கியது. இதில் முதல் 7 சீசனை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், 8 மற்றும் 9-வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். அதனைத் தொடர்ந்து 10-வது சீசனையும் அவரே தொகுத்து வழங்கி வருகிறார்.
தெருவில் சுற்றிய பூனைக்கு ரூ.839 கோடி சொத்தா? மாசம் டாலரில் வரும் வருமானம்; உலகின் பணக்கார பூனை இதுதான்
கடந்த செப்டம்பர் 6-ந் தேதி தொடங்கியுள்ள இந்த 10-வது சீசன் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த ஆண்டு, இதுவரை இல்லாத வகையில் இந்நிகழ்ச்சி தொடக்க மேடையிலேயே சில போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதே சமயம், லட்சுமி பிரியா, ஷாதிகா, நடிகை சாந்தினி தமிழரசன், நடிகர் பிளாக் பாண்டி, தொகுப்பாளர் வினோத் பாபு, நடிகர் குமரன், தொகுப்பாளர் ராகவன் ரகுநாதன், பிரித்விநாத், முத்தழகி, தன்யா, ஒப்பனை அஷ்மிதா, சீரியல் நடிகர் அவினாஷ், நடிகர் முகேஷ், குக் வித் கோமாளி பிரபலம் அன்சார், சீரியல் நடிகை ஸ்வாமிதா, ஜாவித் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
நிகழ்ச்சி தொடங்கிய 3-வது நாளில், நடிகர் பிளாக் பாண்டி உடல்நலக்குறைபாடு காரணமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். நேற்று, சீரியல் நடிகை ஆனந்தி புது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் களமிறங்கினார். வந்ததுமே ஆனந்திக்கும் லட்சுமி பிரியாவுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்நிலையில், இன்று வெளியான முதல் ப்ரோமோவில், லட்சுமி பிரியா நான் டீ குடிக்கவே இல்லை என்கிறார். உடனே ஆனந்தி நீங்க பேசிட்டு இருக்கிற நேரத்துக்கு இந்த காய்கறியை வெட்டுங்கள் என்றதும் லட்சி நான் வெட்ட மாட்டேன் என்றார்.
#Day9#Promo1 of #BiggBossTamil
Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10#Ottikichi#VijaySethupathi#CarniVizha#BiggBossSeason10Tamil#BiggBoss10#BiggBossSeason10#BiggBossTamilBB10#VijayTV#VijayTelevisionpic.twitter.com/E5nLxi87ME
— Vijay Television (@vijaytelevision) September 15, 2026
உடனே ஆனந்தி ஏன் கட் பண்ண முடியாது என்று கேட்க முடியாது நீங்க என்ன பண்ணனுமோ பண்ணுங்க என்கிறார். மேலும், ஒழுங்காக, அமைதியாக சொல்ல தெரியவில்லை என்றால் நான் செய்ய மாட்டேன் என்று கத்தி சொன்னதும் ஆனந்தி எனக்கும் கத்த தெரியும் என்கிறார். உடனே லட்சுமி உங்களுக்கு வேல செய்யுறதுக்கு நான் வரல என்கிறார். இதனுடன் ப்ரோமோ முடிவடைகிறது.
