உங்க ஆட்சி கவிழ்ந்து போச்சு; கொடுத்த வாக்குறுதி படி ஏன் நடந்துக்கல? பிக்பாஸ் வீக் எண்ட் ப்ரமோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், வார இறுதியான இன்று தொகுப்பாளர் விஜய் சேதுபதி வருகை தர உள்ளார். இதற்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.

ரியாலிட்டி ஷோக்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் விஜய் டிவியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகும் ஷோ பிக்பாஸ். இதுவரை 9 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 10-வது சீசன் கடந்த செப்டம்பர் 6-ந் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கியது. இதில் முதல் 7 சீசனை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், 8 மற்றும் 9-வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வழங்கினார். அதனைத் தொடர்ந்து 10-வது சீசனையும் அவரே தொகுத்து வழங்கி வருகிறார்.

முதல் 9 சீசன்களில், ஆரவ், ரித்விகா, முகன் ராவ், ஆரி அர்ஜுன், ராஜு ஜெயமோகன், முஹம்மது அசிம், அர்ச்சனா ரவிச்சந்திரன், முத்துக்குமரன், திவ்யா கணேஷ் ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றிருந்த நிலையில், தற்போது தொடங்கியுள்ள இந்த 10-வது சீசன் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த ஆண்டு, இதுவரை இல்லாத வகையில் இந்நிகழ்ச்சி தொடக்க மேடையிலேயே சில போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

அதே சமயம், ‘மகாநதி’ சீரியலில் நடித்த லட்சுமி பிரியா, நடிகை ஷாதிகா, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை சாந்தினி தமிழரசன், நடிகர் பிளாக் பாண்டி, தொகுப்பாளர் வினோத் பாபு, நடிகர் குமரன், தொகுப்பாளர் ராகவன் ரகுநாதன், பிரித்விநாத், சீரியல் நடிகை முத்தழகி, நடிகை தன்யா, ஒப்பனை கலைஞர் அஷ்மிதா, சீரியல் நடிகர் அவினாஷ், நடிகர் முகேஷ், குக் வித் கோமாளி பிரபலம் அன்சார், சீரியல் நடிகை ஸ்வாமிதா, ஜாவித் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

நிகழ்ச்சி தொடங்கிய 3-வது நாளில், நடிகர் பிளாக் பாண்டி உடல்நலக்குறைபாடு காரணமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனிடையே வார இறுதியான இன்று விஜய் சேதுபதி நிகழ்ச்சிக்கு வர இருக்கிறார். இது குறித்த ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் பேசும் விஜய் சேதுபதி, இந்த வீட்டுக்குள் ஒரு பதவி இருக்கு என்று சொன்னவுடன் ஒரு பெரிய லிஸ்ட் வந்துவிட்டது. இதை நிறைவேற்ற முடியுமா என்று தெரியவில்லை. தலைவரை தேர்வு செய்தவர் ஆலோசனை செய்து வழி நடத்தாமல் அவரே ஆட்சியை கலைத்துள்ளார். 

எதிரணி கேள்வி கேட்கவில்லை, இவ்வளவு சத்தங்களுக்கு நடுவில் சத்தமே இல்லாமல் ஒரு கூட்டம் இருந்திருக்கிறது. அந்த கூட்டத்தை எழுப்பிவிடலாமா என்று கேட்கிறார். அத்துடன் இந்த ப்ரமோ முடிவடைகிறது. 

தொடர்ந்து வெளியாகியுள்ள அடுத்த ப்ரமோவில், லீடர் கொடுத்த வாக்குறுதி, அதன்படி தான் இந்த வாரம் இருந்ததா என்று ஷாதிகாவிடம் கேட்க, இல்லை என்று பதில் வருகிறது. மன்னர் ஆட்சியாக நான் நடந்துகொள்ள மாட்டேன் என்று சொல்லிவிட்டு மன்னர் ஆட்சியாகத்தான் நடந்துகொண்டார்கள். சரியான முடிவு என்பதே அவரிடம் இல்லை. என்று மாரியம்மாள் கூறுகிறார். அதேபோல் ஒரு அநியாயம் நடந்தால் அந்த இடத்தில் அதை தட்டி கேட்க அவர் இல்லை என்று சொல்கின்றனர். 

அதன்பிறகு விஜய் சேதுபதி உங்கள் ஆட்சி கவிழ்ந்துவிட்டது. உங்களால் ஏன் சரியாக நடந்துகொள்ள முடியவில்லை என்று விஜய் சேதுபதி கேட்க அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது.

Source link