பிரபல இசையமைப்பாளர் தேவா(76) மாரடைப்பு காரணமாக கடந்த 17ஆம் தேதி மறைந்தார். இவரது தமிழ் சினிமாவி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ரஜினி, கமல் உள்ளிட்ட பல்வேறு முன்னணி திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து தேவாவின் உடல் அவரது சொந்த கிராமமான சக்கரமநல்லூரில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா அரசு மரியாதை கொடுத்த தவெக அரசுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது, “எங்க அப்பாவுடைய மறைவு எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி கொடுத்திருச்சு. அது உண்மையா பொய்யான்னு இப்பவரையும் எங்களால நம்ப முடியல. ரொம்ப துயரத்துல இருக்கோம். இந்த நேரத்துல அப்பாவுக்கு அரசு மரியாதை செஞ்ச முதல்வர் ஜோசப் விஜய்க்கும் தமிழக அரசுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. அப்பா 40 வருஷம் இசைத்துறையில இருந்ததுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் முதல்வர் விஜய் கொடுத்திருக்காரு. அரசு மரியாதை என்பது சாதாரண விஷயம் கிடையாது.
அமைச்சர்கள், பொது மக்கள் அனைவருக்கும் ரொம்ப நன்றி. அவங்க இல்லைன்னா எங்களால ஒண்ணுமே பண்ணிருக்க முடியாது. முதலமைச்சர் விஜய் நேரடியா வீட்டுக்கு வந்து அப்பாவை பார்த்து ரொம்ப கண்கலங்கி எங்க குடும்பத்துக்கிட்ட ரொம்ப ஆறுதலா பேசுனாரு. ‘என்னாலேயே தாங்க முடியல ஸ்ரீ… நீங்க எப்டி தாங்க போறீங்கன்னு’ கேட்டாரு. கார் ஏறும் போது, ‘என்ன வேணுமோ என்கிட்ட கேளுங்க ஸ்ரீ’ன்னு சொன்னாரு. இந்த கஷ்டமான சூழ்நிலையில எங்களுக்கு தோள் கொடுத்த நல் இதயங்களுக்கு அப்பா சார்பிலும் எங்க குடும்ப சார்பிலும் மிகப்பெரிய நன்றி” என்றார்.
