மாவட்ட ஆட்சியரின் வாகனம் மோதி விப@து; விசாரணையை தொடங்கிய காவல்துறை

மாவட்ட ஆட்சியரின் கார் மோதிய விபத்தில், சாலையைக் கடக்க முயன்ற நபர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியரின் அரசு வாகனம் வெள்ளபாளையம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்ற நபர் மீது மோதியது. இந்த விபத்தில் காயமடைந்த நபர் உடனடியாக மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எமினும், இந்த விபத்தில் படுகாயமடைந்த நபர் உயிருக்குப் போராடி வருவதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அவர் கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பித்துவிட்டு வரும் போது இந்த விபத்து நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.