ஷூட்டிங்கில் அக்ஷய்: பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ராஜேஷ் கன்னாவின் மூத்த மகள் டுவிங்கிளை காதலித்து 2001ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அக்ஷய் குமாருக்கு ஆரவ் என்கிற மகனும், நிதாரா என்கிற மகளும் இருக்கிறார்கள். இந்தி திரையுலகில் எப்பொழுதும் பிசியாக இருக்கும் நடிகர் யாரென்று கேட்டால் அக்ஷய் குமார் பெயரை சொல்வார்கள். அந்த அளவுக்கு மனிதர் படுபசி.
திருமணம் நடந்த அன்று கூட ஷூட்டிங்ஸ்பாட்டில் இருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். சுனில் தர்ஷன் இயக்கிய ஏக் ரிஷ்தா- தி பாண்ட் ஆஃப் லவ் படத்தின் ஷூட்டிங்கில் தான் இருந்தார் அக்ஷய் குமார். மும்பையில் இருக்கும் நட்ராஜ் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. அமிதாப் பச்சன், கரிஷ்மா கபூர், ஜூஹி உள்ளிட்டோர் நடித்த அந்த படப்பிடிப்பு மாலை 7. 30 மணிக்கு தான் பேக்கப் செய்திருக்கிறார்கள். ஷூட்டிங் முடிந்ததும் இயக்குநர் சுனிலிடம் சென்று சார், இன்று இரவு எனக்கு கல்யாணம். நீங்கள் உங்கள் குடும்பத்துடன் கண்டிப்பாக வர வேண்டும் என்று கூறியிருக்கிறார் அக்ஷய்.
கல்யாண கலாட்டா: மும்பை டிராபிக்கில் காரில் போனால் தாலி கட்ட நேரமாகிவிடும் என்று மேக்கப் கலைஞர் ஒருவரிடம் கேட்டு அவரின் பைக்கை எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறார். யாருக்கும் தன்னை அடையாளம் தெரியக் கூடாது என்று ஹெல்மெட் அணிந்து சென்றார் அக்ஷய் குமார். அவர் திடீரென்று அழைத்ததால் இயக்குநரோ தன் வீட்டிற்கு சென்று ரெடியாகிவிட்டு கல்யாண விசேஷத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.
பிறந்தநாள் அன்று நான் லீவு போடாமல் வேலை பார்த்தேன் தெரியுமா என்று பலர் சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் கல்யாணத்தன்று தாலி கட்டும் நேரம் நெருங்கும் வரை வேலை பார்த்தவரை பார்த்துக் கொள்ளுங்கள். இது மட்டும் அல்ல அக்ஷய் குமாருக்கு டுவிங்கிள் சம்மதம் தெரிவித்த கதை அதை விட சுவாரஸ்யமானது.
டீல் போட்ட அக்கி: தர்மேஷ் தர்ஷன் இயக்கத்தில் Mela படத்தில் ஆமீர் கான் ஜோடியாக நடித்தார் டுவிங்கிள் கன்னா. 2000ம் ஆண்டு ரிலீஸான அந்த படம் தோல்வி அடைந்தது. அதற்கும் அக்ஷய் குமார் கல்யாணத்திற்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா, இருக்கிறதே. உன் Mela படம் தோல்வி அடைந்துவிட்டால் நீ இனியும் காலதாமதம் செய்யாமல் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும். டீலா, நோ டீலா என்று கேட்டிருக்கிறார் அக்ஷய் குமார். டுவிங்கிளும் சரி என்று சொல்லிவிட்டார். அந்த படம் ஓடாததால் அவர்களின் திருமணம் உடனே நடந்துவிட்டது.
சுனில் தர்ஷன் இயக்கத்தில் ஏழு படங்களில் நடித்திருக்கிறார் அக்ஷய் குமார். டுவிங்கிள் கன்னாவோ திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். அதே சமயம் படங்களை தயாரிக்க ஆரம்பித்தார். மேலும் புத்தகங்கள் எழுத துவங்கினார். டுவிங்கிள் கன்னா மட்டும் அல்ல அவரின் தங்கை ரிங்கியும் திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
பிரசாந்தின் மஜ்னு படத்தில் ஹீரோயினாக நடித்திருந்ததால் ரிங்கி கன்னாவை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு தெரியும். அக்ஷய் குமாரின் மகன் ஆரவுக்கு சினிமாவில் ஆர்வம் இல்லை.ஆனால் லண்டனில் வசித்து வரும் ரிங்கியின் மகள் நவோமிகா சரண் நடிக்க வந்துவிட்டார். அக்ஷய் குமார் மகள் நிதாராவுக்கு கேமராவுக்கு முன்பு வரும் எண்ணம் இல்லை.
Source link
