கொச்சி: உள்நாட்டில் மிளகு உற்பத்தி குறையும் நிலை ஏற்பட்டுள்ளதாலும், பண்டிகை காலத்தை முன்னிட்டு தேவை அதிகரித்துள்ளதாலும் மிளகு விலை கிலோவுக்கு 724 ரூபாயாக உயர்ந்துள்ளதா க வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வர்த்தகர்கள் தெரிவித்துள்ளதாவது: உள்நாட்டு சந்தையில் தரம் பிரிக்கப்படாத மிளகு கிலோ 704 ரூபாய்க்கும், தரம் பிரிக்கப்பட்ட மிளகு 724 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இந்த வாரம் சந்தைக்கு 50 டன் மிளகு வந்துள்ளது. இதில் பெரும்பகுதி இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
இலங்கையில் மிளகு உற்பத்தி அதிகரித்துள்ளதால், அந்நாட்டில் இருந்து இங்கு வரும் மிளகின் அளவு அதிகரித்துள்ளது.
இதன் வாயிலாக உள்நாட்டு சந்தையில் தேவையை ஓரளவு சமாளிக்க முடியும். இருப்பினும் பண்டிகை காலத்தில் மிளகுக்கான தேவை மேலும் அதிகரிக்கும் என்பதால், விலை தொடர்ந்து உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
